கூட்டுறவு ஒன்றியத்திற்கான நிதி வழங்கல் ஹாக்கி, கால்பந்து, கராத்தே போட்டிகளில் இந்துஸ்தான் மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கு பரிசு

கோவை: கோவை மாவட்ட பள்ளிக்கல்வி துறை சார்பில் 64 வது குடியரசு தின விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. கிழக்கு குறுமைய அளவில் நடந்த பல்வேறு விளையாட்டு போட்டிகளில் இந்துஸ்தான் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளையும், சான்றிதழ்களையும் பெற்றனர். 14, 17, 19 வயது பிரிவுகளில் ஹாக்கி, கால்பந்து, மேஜைப்பந்து, இறகுப்பந்து, சதுரங்கம், சிலம்பம், நீச்சல், கபடி, கராத்தே போன்ற போட்டிகளில் முதல் மற்றும் 2ம் பரிசுகளை வென்று சாதனை படைத்தனர். வெற்றி பெற்ற மாணவர்களை இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன், செயலர் டாக்டர் பிரியா, பள்ளி முதல்வர் செண்பகவல்லி, உடற்கல்வி இயக்குனர் சாலமோன் ஆகியோர் வாழ்த்தினர்.

The post கூட்டுறவு ஒன்றியத்திற்கான நிதி வழங்கல் ஹாக்கி, கால்பந்து, கராத்தே போட்டிகளில் இந்துஸ்தான் மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கு பரிசு appeared first on Dinakaran.

Related Stories:

சூலூரில் கலைஞரின் வரும் முன் காப்போம் மருத்துவ முகாம் வால்பாறை, ஜூன் 23: கோடை சீசன் முடிந்தும் வால்பாறைக்கு சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகளவில் காணப்பட்டது. தேயிலை தோட்டங்களில் நின்று ஆர்வமுடன் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர். வால்பாறையில் நேற்று சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. வால்பாறை பகுதியில் நிலவும் குளு குளு காலநிலை சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. மேலும், மழை, வெயில், மூடு பனி என ஒவ்வொரு பகுதியிலும் விதவிதமான கால நிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், வாட்டர் பால்ஸ் பகுதியில் சாரல் மழை மற்றும் வெயில் நீடிக்கிறது. கவர்கல் பகுதியில் மூடுபனி நிலவியது. வால்பாறை பகுதியில் லேசான சாரல் மழை மற்றும் மேக மூட்டம் நீடித்தது. 3 வகை கால நிலை ஒரு பகுதியில் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் குதூகலம் அடைந்தனர். மேலும், யானைகள், வரையாடுகள், காட்டு பன்றிகள், மான்கள் என சாலையோரம் வலம் வரும் வன விலங்குகள், புதிய நீர்வீழ்ச்சிகள் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தியது. வால்பாறை பூங்கா, படகு இல்லம், கூழாங்கல் ஆறு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. வால்பாறையின் முக்கிய சுற்றுலா தலமான நல்லமுடி பூஞ்சோலை பகுதியில் குவிந்த சுற்றுலா பயணிகளால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், சாலையின் இருபக்கமும் வாகனங்கள் வரிசையாக நின்றது. காவல்துறை மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர். வால்பாறையில் சுற்றுலா பனிகள் கூட்டம் அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.