நெக்ஸ்ட் தேர்வு நடத்துவது குறித்து ஆராய 7 பேர் கொண்ட குழு: ஒன்றிய அரசு நியமித்தது

புதுடெல்லி: 2020ம் ஆண்டு பேட்ச் எம்பிபிஎஸ் மாணவர்களுக்கு நெக்ஸ்ட் தேர்வு நடத்துவதற்கு மருத்துவ கல்லூரிகளின் தயார் நிலையை ஆராய 7 உறுப்பினர்கள் அடங்கிய குழுவை ஒன்றிய அரசு அமைத்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு எம்பிபிஎஸ் மருத்துவ படிப்பில் சேர்ந்து படித்த மாணவர்கள் தங்கள் மருத்துவ படிப்பை முடிக்கும் போது நெக்ஸ்ட் என்ற தேர்வு நடத்தப்படும் என தேசிய மருத்துவ ஆணையம்(என்எம்சி) முதலில் அறிவித்தது. பின்னர் 2020ம் ஆண்டு பேட்ச் மாணவர்களுக்கு இந்த தேர்வு நடத்தப்படும் என அறிவித்தது.

என்எம்சியின் விதிகளின்படி நெகஸ்ட் தேர்வு என்பது இறுதியாண்டு எம்பிபிஎஸ் மாணவர்களுக்கான தகுதி தேர்வாகவும், முதுகலை மருத்துவ படிப்புக்கான நுழைவு தேர்வாகவும் இருக்கும் என அறிவிக்கப்பட்டது. அதே போல் வெளிநாடுகளில் மருத்துவம் பயின்று இநு்தியாவில் பதிவு செய்து பணியாற்ற எழுதப்படும் வெளிநாட்டு மருத்துவ பட்டதாரிகள் தேர்வுக்கு பதிலாகவும் நெக்ஸ்ட் இருக்கும் என கூறப்பட்டது. இந்த நிலையில் நெக்ஸ்ட் தேர்வு நடத்துவது தொடர்பாக மருத்துவ கல்லூரிகளின் தயார் நிலையை ஆராய்வதற்கு 7 பேர் கொண்ட குழுவை அமைக்க ஒன்றிய சுகாதார துறை அமைச்சர் மன்சுக் மண்டாவியா உத்தரவிட்டுள்ளார்.

The post நெக்ஸ்ட் தேர்வு நடத்துவது குறித்து ஆராய 7 பேர் கொண்ட குழு: ஒன்றிய அரசு நியமித்தது appeared first on Dinakaran.

Related Stories: