உஜ்வாலா திட்ட சமையல் கேஸ் சிலிண்டர் விலையை மேலும் 100 குறைத்து ஒன்றிய அரசு உத்தரவு..!!

டெல்லி: உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மேலும் ரூ.100 குறைக்கப்பட்டிருக்கிறது. உஜ்வாலா திட்டம் என்பது வருமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு வழங்குவதற்காக 2016ம் ஆண்டு ஒன்றிய அரசால் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் சுமார் 9.6 குடும்பங்கள் சமையல் எரிவாயு இணைப்பை பெற்றுள்ளனர். மேலும், உஜ்வாலா 2.0 திட்டத்திற்கு ரூ.1.6 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளனர்.

இந்நிலையில், உஜ்வாலா திட்டத்தின் கீழ் எரிவாயு சிலிண்டர் பெரும் பயனாளிகளுக்கு சிலிண்டருக்கு மேலும் 100 ரூபாய் மானியம் வழங்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. டெல்லியில் பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 9 கோடி பயனாளிகள் பயன் பெறுவார்கள் என ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. கடந்த மாதம் சிலிண்டர் விலை ரூ.200 குறைக்கப்பட்ட போது, உஜ்வாலா யோஜனா பயனாளிகளுக்கும் ரூ.200 குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மற்ற வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் உபயோகிப்பாளர்களை காட்டிலும் உஜ்வாலா பயனாளர்கள் 500 ரூபாய் குறைவாக சிலிண்டர்களை பெறுவார்கள்.

உஜ்வாலா 2.0 திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி?

உஜ்வாலா திட்டத்தில் பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். வருமைக்கோட்டிற்கு கீழ் உள்ள 18 வயது நிரம்பிய பெண்கள் இத்திட்டத்தின் கீழ் சமையல் எரிவாயு இணைப்பு பெற விண்ணப்பிக்கலாம். மேலும், இதற்கு முன்பு சமையல் எரிவாயு இணைப்பு எடுக்காதவராக இருக்க வேண்டும். எஸ்.சி, எச்.டி, பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா மற்றும் அந்த்யோதயா அன்ன யோஜனா ஆகிய திட்டத்திற்கு கீழ் பயன்பெறும் பெண்கள், தேயிலை தோட்ட பழங்குடியின பெண்கள், வனப்பகுதியில் வசிக்கும் பெண்கள், தீவு மற்றும் ஏரி தீவுகளில் வசிக்கும் பெண்கள் மற்றும் 14 புள்ளிகள் அடிப்படையில் வறுமைக்கோட்டிற்கு கீழ் இருக்கும் பெண்கள் ஆகியவர்கள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

ஆதார் அட்டை, ரேஷன் கார்டு மற்றும் வங்கி கணக்கு விவரங்கள் இத்திட்டத்தின் கீழ் கண்டிப்பாக தேவைப்படும் ஆவணங்களாக இருக்கிறது. உஜ்வாலா 2.0 திட்டத்திற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். என்ற இணைய முகவரியில் மேற்கொண்ட சான்றிதழ்களை கொண்டு பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.

The post உஜ்வாலா திட்ட சமையல் கேஸ் சிலிண்டர் விலையை மேலும் 100 குறைத்து ஒன்றிய அரசு உத்தரவு..!! appeared first on Dinakaran.

Related Stories: