கோவை, அக். 4: கோவை வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில், காந்தி ஜெயந்தி விழா, காமராஜர் நினைவு நாள் மற்றும் லால் பகதூர் சாஸ்திரி பிறந்த நாள் விழா கோவை விளாங்குறிச்சியில் நேற்று முன்தினம் நடந்தது. காங்கிரஸ் மூத்த தலைவர் கோபால் தலைமை தாங்கினார். சாந்தலிங்கம், காங்கிரஸ் கொடி ஏற்றி வைத்தார். தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில துணை தலைவரும், மாநகராட்சி கவுன்சிலருமான நவீன்குமார், தலைவர்கள் படத்துக்கு மலர் அஞ்சலி செலுத்தினார்.
பின்னர், அன்னதானத்தை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், சரவணம்பட்டி ரகுராமன், சாமுவேல் தாஸ், ஜெயப்பிரகாஷ், கலைச்செல்வன், சுந்தரசாமி, கோபாலகிருஷ்ணன், கருணாகரன், சண்முகசுந்தரம், சந்திரசேகர், கிருஷ்ணசாமி, சின்னசாமி, ராமநாதன், அங்கமணி, காளியப்பன், குமாரசாமி, மணியன், அருணாச்சலம், செல்லப்பன், கார்த்திக், செல்வராஜ், சுரேஷ், முரளி கிருஷ்ணன், தினேஷ், மணிக்குமார், முருகானந்தம், மருதாசலம், பிரகாஷ், பசுபதி, பொன்னுச்சாமி, பாபு என்கிற சண்முகம், காசி, சாந்தாமணி, லட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
The post விளாங்குறிச்சியில் காந்தி ஜெயந்தி விழா appeared first on Dinakaran.
