தலைநகர் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பிற்பகல் சுமார் 2:51 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. டெல்லியின் முக்கியமான பகுதிகளான தெற்கு டெல்லி மட்டுமல்லாமல் மத்திய டெல்லி பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. குறிப்பாக பிரதமர் மோடியின் இல்லம் அமைத்துள்ள பகுதிகளிலும், இந்தியா கேட் உள்ளிட்ட பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
டெல்லியில் மட்டுமல்லாமல் அதன் அண்டை பகுதிகளான நொய்டா உள்ளிட்ட பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 4.6 ரிக்டர் அளவாக பதிவாகியிருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நில நடுக்கத்தால் கட்டடங்கள் லேசாக அதிர்ந்ததால் குடியிருப்பு, அலுவலகங்களில் இருந்தவர்கள் பீதியில் வெளியேறினர்.
நேற்று முன்தினம் ஹரியானா, சண்டிகர் உள்ளிட்ட பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 3.2 ஆக பதிவாகியிருந்தது. நேபாளத்தில் பிற்பகல் 2.25 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.6ஆகவும், 2.51 மணிக்கு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் 6.2ஆகவும் பதிவாகி உள்ளது
இந்நிலையில் தலைநகர் டெல்லி மட்டுமல்லாமல் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். மேலும் அடுத்த 48 மணி நேரத்தில் பாகிஸ்தானில் பெரும் நிலநடுக்கம் ஏற்பட உள்ளதாக டச்சு விஞ்ஞானி ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
The post தெற்கு டெல்லியில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டதால் மக்கள் அச்சம்! appeared first on Dinakaran.
