வேக் ஆட்டோமொபைல்ஸ், வேக்ஸ் எஸ்60 என்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. இதில் 3 கிலோவாட் அவர் பேட்டரி இடம் பெற்றுள்ளது. முழுமையாக சார்ஜ் செய்ய 4 முதல் 5 மணி நேரம் ஆகும். முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 120 கி.மீ தூரம் வரை செல்லலாம். இதில் 2.5 கிலோவாட் திறன் கொண்ட மோட்டார் உள்ளது.
அதிகபட்சமாக மணிக்கு 75 கி.மீ வேகம் வரை செல்லும் என இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. மேட் பிளாக்ஸ் லைட் கிரே, வெள்ளை, பச்சை வண்ணங்களில் கடைக்கும். டிஜிட்டல் டிஸ்பிளே, கோம்பி பிரேக், 3 டிரைவிங் மோட்கள் உள்ளன. ஷோரூம் விலையாக சுமார் ரூ.1.25 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
The post வேக் எஸ்60 appeared first on Dinakaran.