குட்டி குட்டி வீட்டு குறிப்புகள்!

கம்பரிசி, முழு உளுந்து, வெந்தயம், ஆமணக்கு விதை சேர்த்து கம்பு இட்லி செய்யலாம்.
சாமை, தயிர், பால், திராட்சை, முந்திரிப்பருப்பு, மாதுளம்பழ முத்துக்கள் ஆகியவை சேர்த்து தயிர்சாதம் செய்யலாம்.
 கம்பரிசி, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து கம்புக் கொழுக்கட்டை தயாரிக்கலாம்.
 கம்புமாவு, பச்சைப் பயறு மாவு, பேரீச்சம் பழம், கருப்பட்டி, பால் சேர்த்து கம்பு லட்டு தயாரிக்கலாம்.
 சாமைஅரிசி, பயத்தம்பருப்பு, நெய், கல்கண்டு, திராட்சை, முந்திரி பருப்பு சேர்த்து சாமை கல்கண்டு பாத் தயாரிக்கலாம்.
வரகரிசி, பொட்டுக்கடலை மாவு, வெண்ணெய், சூடான எண்ணெய், எள் சேர்த்து வரகு முறுக்கு தயாரிக்கலாம்.
 வரகரிசி, பயத்தம்பருப்பு சேர்த்து வரகு பொங்கல் தயாரிக்கலாம்.
 சோளமாவு, பயத்தம் பருப்பு, மிளகு சேர்த்து சோள உசிலி தயாரிக்கலாம்.
– எஸ். சிவப்பிரகாசம்

The post குட்டி குட்டி வீட்டு குறிப்புகள்! appeared first on Dinakaran.

Related Stories: