அதிமுக – பா.ஜ.க. கூட்டணி முற்றுப்பெறவில்லை: புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி திட்டவட்டம்

சென்னை: அதிமுக – பா.ஜ.க. கூட்டணி முற்றுப்பெறவில்லை என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்; அதிமுக முடிவால் பாஜக தேசிய தலைமை அப்செட்டில் உள்ளது. அதிமுக- பாஜக கூட்டணி முற்றுப் பெறவில்லை. அதிமுக – பாஜக இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது, இன்று அல்லது நாளை நல்ல முடிவு வர வாய்ப்பு உள்ளது. தற்போதைய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாவிட்டாலும் 5 மாநில தேர்தலுக்கு பின் கூட்டணி புதுப்பிக்கப்பட வாய்ப்பு உள்ளது என கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர்; சாதி வாரி கணக்கெடுப்பை புதிய தமிழகம் ஆதரிக்கவில்லை, இது மக்களை பிளவுபடுத்தக்கூடிய தவறான நடைமுறை. இடஒதுக்கீடு மூலம் மட்டுமே தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு நல்ல வாழ்க்கையை கொடுக்க முடியாது. தூய்மையான அரசால் மட்டுமே எந்தவித பேதமும் இல்லாத சமுதாயத்தை உருவாக்க முடியும். சாதிவாரி கணக்கெடுப்பு முறை நாட்டு மக்களை பின்னோக்கி இழுத்துச் செல்லும் என்றும் கூறினார்.

The post அதிமுக – பா.ஜ.க. கூட்டணி முற்றுப்பெறவில்லை: புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி திட்டவட்டம் appeared first on Dinakaran.

Related Stories: