சென்னை: கடலூர் மாவட்டத்தில் நீரில் மூழ்கி உயிமிழந்த மாணவியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ கடலூர் மாவட்டம், தொண்டமாநத்தம் மதுரா, எஸ்.என்.நகர் என்ற முகவரியைச் சேர்ந்த செல்வி.ஜெயஸ்ரீ, த/பெ.செல்வக்குமார் (வயது 14) என்ற 9-ம் வகுப்பு படித்து வந்த மாணவி, நேற்று (1-10-2023) அப்பகுதியிலுள்ள நாகம்மாபேட்டை குளத்தில் குளித்த போது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
இந்த துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். செல்வி. ஜெயஸ்ரீயை இழந்து வாடும் அவரது பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு அவரது குடும்பத்தினருக்கு இரண்டு இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
The post கடலூர் நாகம்மாபேட்டையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சிறுமி குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிவாரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.