2023ம் ஆண்டிற்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு கேட்டலின் கரிகோ, ட்ரோ விய்ஸ்மேன் ஆகியோருக்கு அறிவிப்பு

டெல்லி: 2023ம் ஆண்டிற்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு கேட்டலின் கரிகோ, ட்ரோ விய்ஸ்மேன் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நோபல் பரிசு, உலகின் மிக உயர்ந்த பரிசாக கருதப்படுகிறது. அமைதி, இலக்கியம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம் மற்றும் மருத்துவ துறைகளில் தலை சிறந்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. நோபல் பரிசு ஒரு பதக்கம், சான்றிதழ் மற்றும் ரொக்கப்பரிசு அடங்கியது. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. இந்த நிலையில், இந்த ஆண்டிற்கான மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

2023ம் ஆண்டிற்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு கேட்டலின் கரிகோ, ட்ரோ விய்ஸ்மேன் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு மருந்து தயாரித்ததற்காக, 2 மருத்துவர்களுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. கோவிட் -19க்கு எதிரான தடுப்பூசி தயாரிப்புக்கு உதவிய ஆய்வை மேற்கொண்டவர்களுக்கு நோபல் பரிசு வழப்பட்டுள்ளது. நியூக்ளியோசைட் அடிப்படை மாற்றங்கள் தொடர்பான கண்டுபிடிப்புகளுக்காக கேட்டலின் கரிக்கோ, ட்ரோ விய்ஸ்மேன் ஆகியோருக்கு 2023ஆம் ஆண்டுக்கான மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

The post 2023ம் ஆண்டிற்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு கேட்டலின் கரிகோ, ட்ரோ விய்ஸ்மேன் ஆகியோருக்கு அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: