காங்கிரஸ் பொருளாளராக அஜய் மாகென் நியமனம்

புதுடெல்லி: காங்கிரஸ் பொருளாளராக இருந்த அகமது படேல் 3 ஆண்டுகளுக்கு முன் இறந்ததையடுத்து, இடைக்கால பொருளாளராக பவன் குமார் பன்சால் செயல்பட்டு வந்தார். இந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்னர் ராஜஸ்தான் காங்கிரஸ் செயலாளராக இருந்த அஜய் மாகென் தனது பதவியை ராஜினாமா செய்தார். அப்போதிருந்து அவருக்கு கட்சியில் எவ்வித பதவியும் தரப்படவில்லை. ராகுல்காந்தியின் நம்பிக்கைக்கு உரியவரான அஜய் மாகெனுக்கு இப்போது காங்கிரஸ் பொருளாளர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. இது பற்றிய அறிவிப்பை காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்டுள்ளார்.

The post காங்கிரஸ் பொருளாளராக அஜய் மாகென் நியமனம் appeared first on Dinakaran.

Related Stories: