இதையடுத்து, இந்த வழக்குகளில் கீழமை நீதிமன்றங்கள் சரியாக விசாரிக்கவில்லை என்றும் அதனால் இந்த விடுதலை வழக்குகளை தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்து வந்தார்.
எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் அதிகார வரம்பு அவருக்கு தரப்பட்டிருந்ததால், அவர் இந்த வழக்குகளை தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தார். இந்த வழக்குகளில் சம்மந்தப்பட்ட அனைவருக்கும், லஞ்ச ஒழிப்பு துறைக்கும் பதில் தருமாறு நோட்டீஸ் அனுப்பியிருந்தார். வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில் அவரை 3 மாதங்கள் மதுரை கிளைக்கு உயர் நீதிமன்றம் மாற்றம் செய்துள்ளது. உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அவர் கனிம வளம், நில சீர்திருத்தம், வாடகை, நிலம் கையகப்படுத்துதல், சுதந்திர போராட்ட தியாகிகள் பென்சன் தொடர்பான வழக்குகளை விசாரிப்பார். அவர் சென்னையில் விசாரித்த எம்.பி., எம்.ஏல்.ஏக்கள் தொடர்பான வழக்குகளை ரத்து செய்யக்கோரும் மனுக்கள் உள்ளிட்ட வழக்குகளை நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் விசாரிப்பார். சிபிஐ மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் தொடரப்படும் வழக்குகளை நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா விசாரிப்பார். ஜாமீன் மற்றும் முன்ஜாமீன் மனுக்களை நீதிபதி சி.வி.கார்த்திகேயன் விசாரிப்பார்.
The post எம்பி, எம்எல்ஏக்கள் வழக்குகளை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் ஐகோர்ட் மதுரை கிளைக்கு மாற்றம் appeared first on Dinakaran.