முதல்வருக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை காவிரி நீரை பெற்று தர போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை

சென்னை: ‘‘காவிரி நீரை பெற்று தர போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என முதல்வருக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: டெல்லியில் நடந்த காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுக் கூட்டத்தில், தமிழ்நாட்டின் சார்பில் 12,500 கன அடி நீரை தமிழ்நாட்டிற்கு திறந்துவிட வேண்டுமென்று கோரிக்கை வைத்த நிலையில், இன்று முதல் 15 நாட்களுக்கு வினாடிக்கு 3,000 கன அடி நீரை கர்நாடகா திறந்துவிட வேண்டுமென்று காவிரி நீர் ஒழுங்காற்று குழு உத்தரவிட்டிருப்பது தமிழ்நாட்டிற்கு பெருத்த பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது. உச்ச நீதிமன்றத் தீர்ப்புப்படி, தமிழ்நாட்டிற்கு உரிய நீரினை அளிக்கும் அளவுக்கு கர்நாடக அணைகளில் போதிய அளவு தண்ணீர் இருந்தும், காவிரி நீர் ஒழுங்காற்று குழு உத்தரவிட்டுள்ள 3,000 கன அடி நீரை கூட திறந்துவிட முடியாது என்று கர்நாடக அரசு கூறுவது கடும் கண்டனத்திற்குரியது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, தமிழ்நாட்டிற்கு உரிய நீரை பெற்றிட ஏதுவாக காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் உச்ச நீதிமன்றம் மூலமாக வாதிட முதல்வர் மு.க.ஸ்டாலின் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

The post முதல்வருக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை காவிரி நீரை பெற்று தர போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: