தாய் தீக்குளித்து தற்கொலை 2 குழந்தைகளும் கருகி பலி: காப்பாற்ற முயன்ற தாத்தாவும் சாவு

உளுந்தூர்பேட்டை: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே நத்தாமூரை சேர்ந்தவர் பொன்னுரங்கன்(75). இவர் உரம் மற்றும் சிமென்ட் பொருள் விற்பனை செய்து வந்தார். இவரது 4வது மகள் திரவியத்தை (42) கிளாப்பாளையத்தை சேர்ந்த மதுரை வீரனுக்கு கடந்த 6 ஆண்டுக்கு முன் திருமணம் செய்து வைத்தார். இந்த தம்பதிக்கு ரியாஷினி(4), விஜயகுமாரி(3) ஆகிய 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த இரண்டு ஆண்டாக மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த திரவியம், தாய் வீடான நத்தாமூர் கிராமத்தில் குழந்தைகளுடன் வசித்து வந்தார். நேற்றுமுன்தினம் நள்ளிரவில் திரவியம் எழுந்து உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் அறை முழுவதும் தீ பரவியதில் தூங்கி கொண்டிருந்த இரு குழந்தைகளும் அலறினர். சத்தம் கேட்டு பக்கத்து அறையில் படுத்திருந்த பொன்னுரங்கம், அவரது மகன் விஜயகுமார்(53),ஆகியோர் அவர்களை காப்பாற்ற முயன்றனர். அதற்குள் திரவியம் மற்றும் 2 குழந்தைகளும் இறந்தனர். தீயினால் ஏற்பட்ட புகைமூட்டம் காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டு பொன்னுரங்கமும் பரிதாபமாக உயிரிழந்தார்.

The post தாய் தீக்குளித்து தற்கொலை 2 குழந்தைகளும் கருகி பலி: காப்பாற்ற முயன்ற தாத்தாவும் சாவு appeared first on Dinakaran.

Related Stories: