திருத்துறைப்பூண்டி: டெல்டாவில் உற்பத்தியாகும் விளைபொருட்கள், தேசத்திற்கே உரியது என்பதை கர்நாடகா உணர வேண்டும் என்று முத்தரசன் தெரிவித்தார். இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் திருத்துறைப்பூண்டியில் நேற்று அளித்த பேட்டி: கர்நாடகா வழக்கமாக வழங்க வேண்டிய தண்ணீரை வழங்காததால் காவிரி டெல்டா மாவட்டங்களில் கதிர் வரும் நிலையில் குறுவை பயிர்கள் கருகி வருகிறது. சம்பா சாகுபடியும் தொடங்க முடியாத துர்பாக்கிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.இது குறித்து உச்ச நீதிமன்றம் மற்றும் காவிரி ஒழுங்காற்று குழு ஆகியவை பிறப்பித்த உத்தரவுகளை கூட செயல்படுத்த விடாமல் கர்நாடகத்தில் பாஜ, மதசார்பற்ற ஜனதா தளம் மற்றும் கர்நாடக அமைப்புகள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றன. டெல்டா மாவட்டங்களில் உற்பத்தியாகும் விளைபொருள்கள் அனைத்தும் தேசத்திற்கு உரியது என்பதை கர்நாடகம் உணர வேண்டும். எனவே காவிரி பாசன மாவட்டங்களில் வாழ்வாதாரமான குறுவை பயிர்களை காப்பாற்றவும், சம்பா சாகுபடி தொடங்கவும் உரிய தண்ணீரை கர்நாடகா வழங்க ஒன்றிய அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
The post டெல்டா விளைபொருட்கள் தேசத்திற்கே உரியது என்பதை கர்நாடகா உணர வேண்டும்: முத்தரசன் பேட்டி appeared first on Dinakaran.