விபத்தில் இறந்த ஏட்டு குடும்பத்திற்கு 4,800 காவலர்கள் சேர்ந்து ரூ.25 லட்சம் நிதியுதவி

சங்கரன்கோவில்: தென்காசி வடக்கு பனவடலி சத்திரத்தை சேர்ந்த 2009ம் ஆண்டு பேட்சை சேர்ந்த பாலசுப்ரமணியன் (35). அய்யாபுரம் காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வந்தார். கடந்த மே 8ம் தேதி அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தார். இவரது மனைவி பெரியதாய் சங்கரன்கோவில் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக உள்ளார். காவலர்கள் 4,800 பேர் ஒன்று சேர்ந்து வாட்ஸ் அப் குழு அமைத்து ரூ.25 லட்சம் நிதி திரட்டி அவரது குடும்பத்துக்கு தந்தனர்.

The post விபத்தில் இறந்த ஏட்டு குடும்பத்திற்கு 4,800 காவலர்கள் சேர்ந்து ரூ.25 லட்சம் நிதியுதவி appeared first on Dinakaran.

Related Stories: