பாஜ அலுவலக ஊழியர் ஜோதிக்குமார் வீட்டில் நடந்த ரெய்டு மூடி மறைப்பு: மார்க்சிஸ்ட் குற்றச்சாட்டு

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பாஜக மாநில தலைமை அலுவலக ஊழியர் ஜோதிக்குமார் வீட்டில் கடந்த 27ம்தேதி காலை 7 மணி முதல் நண்பகல் 12 மணி வரை அமலாக்கத்துறை சோதனைகள் நடைபெற்றுள்ளது. இந்த சோதனைகள் பற்றி அமலாக்கத்துறையோ, பாஜவோ இதுவரையிலும் வெளிப்படையாக எதுவும் தெரிவிக்கவில்லை. இது அமலாக்கத் துறையின் மீது நம்பிக்கையின்மையை அதிகரித்துள்ளது. சாதாரணமாக அமலாக்கத் துறையின் சோதனைகள் அதன் தொடர்பான விபரங்கள் பெரிய அளவில் பேசப்படுவது வழக்கமாக உள்ளது. ஆனால் ஜோதிக்குமார் வீட்டில் நடந்த சோதனை மூடி மறைக்கப்பட்டிருக்கிறது. எனவே, அமலாக்கத்துறையும், பாஜவும் பொதுமக்கள் கேட்கும் இந்த கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டியவர்களாக இருக்கிறார்கள்.

The post பாஜ அலுவலக ஊழியர் ஜோதிக்குமார் வீட்டில் நடந்த ரெய்டு மூடி மறைப்பு: மார்க்சிஸ்ட் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: