The post மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தூய்மைப்பணி: பாஜவினருக்கு அண்ணாமலை அழைப்பு appeared first on Dinakaran.
சென்னை: தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை நேற்று வெளியிட்ட அறிக்கை: அக்டோபர் ஒன்றாம் தேதி, மக்கள் கூடும் சந்தைகளிலும், மத வழிபாட்டு தலங்களிலும், ரயில் பாதைகளிலும், ரயில் நிலையங்களிலும், நீர் நிலைகளிலும், சமூகக் கூடங்களிலும், நகர்ப்புறம் மற்றும் கிராமச்சாலைகளிலும் துப்புரவு மற்றும் தூய்மைப் பணிகளை, சாமானிய மக்களும் பாரத தேசத்தின் தூய்மைத் தூதர்களாக, முன்னெடுத்து செய்யலாம். பிரதமரின் இந்த நல்ல முயற்சிக்கு, கோடிக்கணக்கான மக்கள் தங்கள் ஆதரவை Swachhatahiseva.com இணையத்தின் வழியாக தெரிவித்திருக்கிறார்கள். தமிழக பாஜ செயல்வீரர்களும், பொதுமக்களும், 5 கோடிக்கும் அதிகமான மக்கள் பங்களிப்புடன் நடைபெறும் இந்த தூய்மை அறப்பணியிலே, தன்னார்வத்துடன் பங்கேற்க வேண்டும்.
The post மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தூய்மைப்பணி: பாஜவினருக்கு அண்ணாமலை அழைப்பு appeared first on Dinakaran.