ம.பி பா.ஜ ஆட்சியில் 18 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை: ராகுல் குற்றச்சாட்டு

போபால்: ம.பி சாஜாபூர் மாவட்டம் கலபிபால் தொகுதியில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது: நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் முதலில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் எண்ணிக்கையை அறிய ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம். இந்த நாடே ஒன்றிய அரசு செயலாளர்கள் மற்றும் இதர துறை செயலாளர்கள் உள்ளிட்ட 90 அதிகாரிகளால்தான் ஆளப்படுகிறது. பாஜ எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்கள் யாருமே அரசமைப்பு சட்டங்கள் மற்றும் கொள்கைகளை உருவாக்குவதில் பங்கேற்பதில்லை.

ஆட்சியில் உள்ள பாஜவுக்கு பதிலாக ஆர்.எஸ்.எஸ் அதிகாரத்துவம் தான் சட்டங்களை வகுக்கிறார்கள். ம.பி ஊழலில் மையமாகவே இருந்து வருகிறது. வியாபம் ஊழல், எம்.பி.பி.எஸ் பட்டம் விற்பனை, கேள்வித்தாள்கள் கசிவு மற்றும் விற்பனை, மகாகால் லோக் காரிடார் கட்டுமான ஊழல் ஆகிய ஊழல்கள் இங்கே நடந்துள்ளன.மபியில் பா.ஜ ஆட்சி நடத்திய கடந்த 18 ஆண்டுகளில் 18 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட அவலமும் இங்குதான் நடந்துள்ளது. அதாவது ஒரு நாளில் 3 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இவ்வாறு ராகுல்காந்தி பேசினார்.

The post ம.பி பா.ஜ ஆட்சியில் 18 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை: ராகுல் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: