கோவை, செப். 30: தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனை தடுக்க அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு முதல்வர் உத்தரவின்படி, கோவை மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத்துறை சார்பாக ஊராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் மாநகராட்சி பகுதிகளில் நாளை (1ம் தேதி) முதல் சிறப்பு காய்ச்சல் தடுப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாம் சுமார் 107 இடங்களில் நடைபெற உள்ளது.
மாநகராட்சி பகுதிகளில் 32 இடங்கள், ஊராட்சியில் 48 இடங்கள், பேரூராட்சியில் 27 இடங்களில் இந்த முகாம் நடக்கிறது. இந்த முகாமில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும். காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களின் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளுக்கு பரிந்துரை செய்யப்படுவர். முகாமில் நோய் எதிர்ப்பு சக்திக்கு நிலவேம்பு கசாயம் அளிக்கப்பட உள்ளது. பொதுமக்கள் இந்த முகாமை பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.
The post கோவை மாவட்டத்தில் 107 இடங்களில் நாளை காய்ச்சல் தடுப்பு முகாம் appeared first on Dinakaran.