ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு உரிமை, உயர்கல்விக்கான ஊதிய உயர்வு போன்றவற்றை மீண்டும் வழங்க வேண்டும், பதவி உயர்வுக்கு தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற உயர்நீதி மன்ற தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்தல், மேலாண்மைக் குழுவின் தகவல்களை இஎம்ஐஎஸ்-ல் பதிவேற்றும் பணிகளில் இருந்து ஆசிரியர்களை முழுமையாக விடுவித்தல், என்பன உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி சென்னையில் இந்த பேரணி நடந்தது. இந்த பேரணியில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் சென்னைக்கு வந்து கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் நடந்த இந்த பேரணிக்கு மாநிலத் தலைவர் மணிமேகலை தலைமை தாங்கினார். சிஐடியு மாநிலத் தலைவர் சவுந்தரராஜன் பேரணியை தொடங்கி வைத்தார். மேலும், இந்த பேரணியில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம், இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு ஆகிய சங்கங்கள் பங்கேற்றனர். இந்த பேரணி சிந்தாதரிப்பேட்டையில் இருந்து ராஜரத்தினம் ஸ்டேடியம் வரை சென்றது. மேற்கண்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், போராட்டம் தொடரும் என்று தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் தெரிவித்துள்ளனர்.
The post பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டை நோக்கி ஆசிரியர்கள் பேரணி: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர் appeared first on Dinakaran.
