3ம் கட்டமாக வரும் 4ம் தேதி முதல் பாஜ தலைவர் அண்ணாமலை நடைபயணம்

சென்னை: தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை 3ம் கட்டமாக என் மண் என் மக்கள் நடைபயணத்தை வருகிற 4ம் தேதி மேட்டுப்பாளையத்தில் தொடங்குகிறார். அக்டோபர் 5ம் தேதி அவிநாசி, பவானிசாகர், 6ம் தேதி கோபிச்செட்டிப்பாளையம், அந்தியூர். 8ம் தேதி பல்லடம், சூலூர். 9ம் தேதி திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு. 10ம் தேதி பெருந்துறை, மொடக்குறிச்சி, 11ம் தேதி ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, 13ம் தேதி பவானி, குமாரபாளையம், 14ம் தேதி சங்ககிரி, திருச்செங்கோடு, 16ம் தேதி ராசிபுரம், சேர்ந்தமங்கலம், 17ம் தேதி நாமக்கல், பரமத்திவேலூர், 18ம் தேதி அரவக்குறிச்சி, கரூர், 19ம் தேதி குளித்தலை, கிருஷ்ணராயபுரம். 20ம் தேதி மணப்பாறை, ஸ்ரீரங்கம், 21ம் தேதி வீராலிமலை, புதுக்கோட்ைட, 26ம் தேதி கந்தவர்கோட்டை, திருவெறும்பூர், 27ம் தேதி திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, 28ம் தேதி மண்ணச்சநல்லூர், லால்குடி, 29ம் தேதி முசிறி, துறையூர், 31ம் தேதி திருவையாறு, தஞ்சாவூரில் என் மண் என் மக்கள் நடைபயணம் மேற்கொள்கிறார் என நடைபயண பொறுப்பாளர் கே.எஸ்.நரேந்திரன், இணை பொறுப்பாளர் அமர் பிரசாத் ரெட்டி தெரிவித்துள்ளனர்.

The post 3ம் கட்டமாக வரும் 4ம் தேதி முதல் பாஜ தலைவர் அண்ணாமலை நடைபயணம் appeared first on Dinakaran.

Related Stories: