ஆசிரியர் பணி நியமன ஊழல் அமலாக்கத்துறை அதிகாரியை நீக்க நீதிமன்றம் உத்தரவு

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் பணி நியமனத்தில் ஊழல் நடந்தது தொடர்பான வழக்கு விசாரணையை அமலாக்கத்துறை மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கு கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அம்ரிதா சின்கா, ‘‘அமலாக்கத்துறை உதவி இயக்குனர் மிதிலேஷ் குமார் மிஸ்ரா முந்தைய விசாரணையின்போது நீதிமன்றத்தில் அளித்த பதில்களால் நீதிமன்றம் அதிருப்தி அடைந்துள்ளது. எனவே உடனடியாக மிதிலேஷ் குமாரை தற்போது நடந்து வரும் ஆசிரியர் பணி நியமன ஊழல் வழக்கு விசாரணையில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும். அவரது பொறுப்பை வேறு அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும்” என்று உத்தரவிட்டார்.

The post ஆசிரியர் பணி நியமன ஊழல் அமலாக்கத்துறை அதிகாரியை நீக்க நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: