டுகாட்டி நிறுவனம், ஸ்கிராம்ப்ளர் வரிசையில் புதிய பைக்குகளை அறிமுகம் செய்துள்ளது. ஐகான் , நைட்ஷிப்ட், ஃபுல் திராட்டில் என மூன்று வகையாக அறிமுகம் ஆகியுள்ளன. இவை, இத்தாலியில் 2022ம் ஆண்டு நடந்த மிலன் மோட்டார் சைக்கிள் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டவை. இவற்றில் டுகாட்டி ஸ்கிராம்ப்ளர் நைட்ஷிப்ட் மற்றும் ஃபுல் திராட்டில் ஆகியவற்றின் ஷோரூம் விலை சுமார் ரூ.12 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சைடு பேனல், சீட் உட்பட பல அம்சங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. ஃபுல் திராட்டில் வேரியண்ட் ஸ்போர்ட்டியான தோற்றத்துடன் அமைந்துள்ளது.
ஐகான் வேரியண்ட் ஷோரூம் விலை சுமார் ரூ.10.39 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பைக்குகளில் 803 சிசி இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 8,250 ஆர்பிஎம்-ல் 73 பிஎச்பி பவரையும், 7,000 ஆர்பிஎம்-ல் 65 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் இடம் பெற்றுள்ளது. எலக்ட்ரானிக் திராட்டில், 2 ரைடிங் மோட்கள், ஏபிஎஸ், 4.3 அங்குல டிஎப்டி இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், புளூடூத் இணைப்பு வசதி, நேவிகேஷன் வசதி உட்பட பல அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.
The post டுகாட்டி ஸ்கிராம்ப்ளர் பைக்குகள் appeared first on Dinakaran.
