சென்னையில் 20,000 சதுர அடியில் இசை, நடன அருங்காட்சியகம் அமைக்கப்படும் :தமிழ்நாடு சுற்றுலாத்துறை

சென்னை : சென்னையில் 20,000 சதுர அடியில் இசை, நடன அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது.சுற்றுலாத் துறையில் தமிழ்நாட்டை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்வதை நோக்கமாகக் கொண்ட “தமிழ்நாடு சுற்றுலா கொள்கை – 2023”யை அண்மையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டார். தமிழ்நாடு சுற்றுலா கொள்கை- 2023ல் 5 ஆண்டுகளில் ரூ. 20,000 கோடி முதலீட்டில் பல்வேறு சுற்றுலா திட்டங்களை தமிழக அரசு வகுத்துள்ளது.

அவற்றுள் ஒன்றாக கலை மற்றும் கலாச்சாரத்தை மேம்படுத்தும் வகையில் சென்னையில் 20,000 சதுர அடியில் இசை மற்றும் நடன அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று தமிழக சுற்றுலாத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள பல்வேறு கலைகள், நடனம் மற்றும் இசை வடிவங்களை காட்சிப்படுத்தும் ஊடகமாக அந்த அருங்காட்சியகம் அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அருங்காட்சியகத்தில் கலை வடிவங்களை மேம்படுத்துவதற்காக செயல்திறன் இடங்கள், கலைக்கூடங்கள் மற்றும் பட்டறைகள் அமைக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தமிழ் சினிமா வரலாறு, பிரபல நடிகர்களை வெளிப்படுத்தும் வகையில் கோலிவுட் கேலரியும் இந்த கலை அருங்காட்சியகத்தில் அமைய உள்ளது.

The post சென்னையில் 20,000 சதுர அடியில் இசை, நடன அருங்காட்சியகம் அமைக்கப்படும் :தமிழ்நாடு சுற்றுலாத்துறை appeared first on Dinakaran.

Related Stories: