சாம்பியன் பட்டம் வென்ற கோவை மாணவர்

 

கோவை, செப். 29: கோவை கணபதி பகுதியை சேர்ந்தவர் மாணவர் கீர்த்தி ரோஹன் (13). இவர் துபாயில் நடைபெற்ற சர்வதேச அளவிலான யோகா போட்டியில் சாம்பியன் ஆப் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இது குறித்து மாணவர் கீர்த்தி ரோஹன் கூறியதாவது: நான் கடந்த மூன்று ஆண்டுகளாக ஓசோன் யோகா மையத்தில் யோகா கற்று வருகிறேன். இதுரை 30க்கும் மேற்பட்ட மாவட்ட மற்றும் மாநில, மற்றும் தேசிய அளவிலான அலவிலான யோகா போட்டியில் கலந்து கொண்டு பரிசுகளை வென்றுள்ளேன். சர்வதேச போட்டியில் கலந்துகொள்வதற்கான தேர்வு போட்டி கோவையில் நடைபெற்றது.

இதில் நான் கலந்து கொண்டு பல்வேறு யோகாசனங்களை செய்தி காட்டி சர்வதேச போடிக்கு தகுதி பெற்றேன். சர்வதேச அளவிலான போட்டி துபாயில் நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இவர்கள் சாம்பியன் பட்டம் வென்றவர்கள். போட்டி மிகவும் கடுமையாக இருந்தது. இருந்தாலும், போட்டியில் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும் என்பதால் யோகாவில் மிகவும் கடினமான ஆசனங்கள் என கருதப்படும் துருவாசனம், சிலசாசனம், ஏகபாத சீராசனம், பக்காசனம், கோகுல கிருஷ்ணாசனம் போன்ற ஆசனங்களை செய்து சாம்பியன் ஆப் சாம்பியன் பட்டத்தை வென்றேன். இதில் மூலம் வரும் டிசம்பர் மாதம் தாய்லாந்தில் நடைபெறவுள்ள உலக அளவிலான யோகா போட்டியில் கலந்துகொள்ளும் தகுதியை பெற்றேன். இவ்வாறு அவர் கூறினார்.

The post சாம்பியன் பட்டம் வென்ற கோவை மாணவர் appeared first on Dinakaran.

Related Stories: