நாகை: அருகே திடீரென பெய்த கனமழையால் 500 ஏக்கரில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சாய்ந்தன. கிழ்வேபளூரை அடுத்த வேன்படி , கடலாக்குடி, திருப்பஞ்சனம், பிச்சமஞ்சம், அனக்குடி, பரப்பனூர் உள்ளிட்ட பகுதிகளில் 500 ஏக்கரில் நெல் பயிரிடபட்டுள்ளது.
போதிய தண்ணீர் இல்லாததால் வெகு தூரத்தில் இருந்து மோட்டார் மூலம் தண்ணீர் இறைத்து குருவை பயிர்களை விவசாயிகள் பாதுகாத்து வந்தனர். 10 நாட்களில் அறுவடை செய்ய இருந்த நிலையில் நேற்று முன்தினம் கொட்டிய கனமழையால் நெற்பயிர்கள் சாய்ந்தன. வேளாண்துறை அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்கவேண்டும் என்று பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறினர்.
The post நாகையில் அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் வீணானது: ஆய்வு செய்து நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை appeared first on Dinakaran.
