பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் ஜூனியர் எக்ஸிகியூட்டிவ்

பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

1Junior Executive (Engineering). வயது: 29க்குள். சம்பளம்: ரூ.30,000-1,20,000. தகுதி: மெக்கானிக்கல்/எலக்ட்ரிக்கல்/இன்ஸ்ட்ருமென்டேஷன்/ எலக்ட்ரானிக்ஸ்/ சிவில்/ கெமிக்கல் இன்ஜினியரிங்கில் டிப்ளமோ முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
2Associate Executive (Engineering): வயது: 29க்குள். சம்பளம்: ரூ.40,000- 1,40,000. தகுதி: மெக்கானிக்கல்/எலக்ட்ரிக்கல்/இன்ஸ்ட்ருமென்டேஷன்/ எலக்ட்ரானிக்ஸ்/ சிவில்/கெமிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் முதல் வகுப்பில் பி.இ.,/பி.டெக்., தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
3Junior Executive (Accounts): வயது: 30க்குள். சம்பளம்: ரூ.30,000-1,20,000. தகுதி: ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் சிஏ/சிஎம்ஏ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
4Junior Executive (Quality Assurance): வயது: 29க்குள். சம்பளம்: ரூ.0,000-1,20,000. தகுதி: ஆர்கானிக்/பிசிக்கல்/இன் ஆர்கானிக்/அனலிடிக்கல் வேதியியல் பாடப்பிரிவில் 60% மதிப்பெண்களுடன் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 5 வருட பணி அனுபவம்.
5Associate Executive (Human Resources): வயது: 30க்குள். சம்பளம்: ரூ.40,000-1,40,000. தகுதி: மனித வளத்துறையில் எம்பிஏ/ பிஎம் மற்றும் ஐஆர்/எம்எம்எஸ்/ லேபர் ஸ்டடீசில் 65% மதிப்பெண்களுடன் முதுநிலைப் பட்டம் மற்றும் 3 வருட பணி அனுபவம்.
தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு (சிபிடி தேர்வு)/ குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
கட்டணம்: பொது/ஒபிசி/ பொருளாதார பிற்பட்டோர் ஆகியோருக்கு ₹590/-. இதை ஆன்லைன் மூலம் செலுத்தவும்.
https://www.bharatpetroleum.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.09.2023.

The post பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் appeared first on Dinakaran.

Related Stories: