பெளர்ணமி கிரிவலம் எதிரொலி: சென்னை – திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்… தெற்கு ரயில்வே அறிவிப்பு.!!

திருவண்ணாமலை: பெளர்ணமி கிரிவலத்தை ஒட்டி திருவண்ணாமலைக்கு 2 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாக விளங்கக்கூடியது இத்தலம். திருவண்ணாமலை என்றவுடன் அண்ணாமலையாரின் ஆன்மீக பக்தர்களுக்கு நினைவுக்கு வருவது 14 கி.மீ. தொலைவு கொண்ட கிரிவலம்தான். திருவண்ணாமலை கிரிவல பாதையில் தினந்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்களும், பௌர்ணமி, கார்த்திகை தீபம் உள்ளிட்ட பல்வேறு விசேஷ நாட்களில் பல லட்சம் பக்தர்களும் பல்வேறு மாவட்ட, மாநிலங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு வந்து கிரிவலம் மேற்கொண்டு அண்ணாமலையாரை தரிசித்து செல்வது வழக்கம்.

அதன்படி புரட்டாசி மாத பௌர்ணமியானது, வரும் ஆகஸ்ட் 29-ம் தேதி வருகிறது. அன்று ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு கிரிவலம் செல்வார்கள். கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் 2 சிறப்பு ரயில்களை தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. 29-ம் தேதி சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் மாலை 6 மணிக்கு புறப்பட்டு இரவு 12.05-க்கு திருவண்ணாமலை சென்றடையும். 30-ம் தேதி அதிகாலை 3.45-க்கு திருவண்ணாமலையில் இருந்து புறப்படும் ரயில், காலை 9.05-க்கு சென்னை வந்தடையும். பெளர்ணமி கிரிவலத்துக்காக இயக்கப்படும் 2 சிறப்பு ரயில்களும் வேலூர் வழியாக திருவண்ணாமலை செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post பெளர்ணமி கிரிவலம் எதிரொலி: சென்னை – திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்… தெற்கு ரயில்வே அறிவிப்பு.!! appeared first on Dinakaran.

Related Stories: