ஆக்கிரமிப்புகளை அகற்றி ரோடுகளை விரிவாக்கம் செய்ய திட்டம்

 

கோவை, செப்.27: கோவை நகரில், மாநில நெடுஞ்சாலைத்துறை கட்டுபாட்டில் உள்ள ரோடுகளை விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக பிரதான ரோடுகளை தவிர்த்து நகரின் பல்வேறு பகுதிக்கு சென்று வரும் இணைப்பு ரோடுகள், மாநகராட்சி வார்டிற்குள் செல்லும் ரோடுகளை சீரமைக்க, தேவைக்கு ஏற்ப விரிவாக்கம் செய்ய மாநில நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டுள்ளது. இதற்கான நிதி ஒதுக்கீடு கிடைத்ததும் பணிகள் நடத்தப்படும். நகரில் மாநில நெடுஞ்சாலை ரோடுகளில் பல்வேறு இடங்களில் ஆக்கிரமிப்புகள் இருக்கிறது. ரோட்டில் ஒர்க் ஷாப், கடைகள், வியாபார கடைகள், கட்டிடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டதால் வாகனங்கள் சென்று வர முடியாத நிலையிருக்கிறது.

50 சதவீத்திற்கும் அதிகமாக பல இடங்களில் ரோடுகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. பார்க்கிங் ஏரியாவை வணிக வளாகங்கள் முடக்கி விட்டதால், பொதுமக்கள் ரோட்டை வாகனம் நிறுத்தும் இடங்களாக பயன்படுத்தி வருகின்றனர். ஆக்கிரமிப்புகளை அகற்ற பல்வேறு துறையினர் முன் வரவேண்டும். பல ஆண்டாக ஆக்கிரமிப்பாளர்கள் பொது இடங்களை அபகரித்து விட்டனர். சில இடங்களில் கட்டுமானங்கள் உருவாக்கப்பட்டது. இந்த இடங்களை மீட்டால் மட்டுமே பணிகளை நடத்த முடியும். நகரில் சுமார் 60 கிமீ தூர ரோடுகளில் அதிகளவு ஆக்கிரமிப்பு இருப்பதாக தெரிகிறது. இவற்றை அகற்றி ரோட்டை விரிவாக்கம் செய்யவேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

The post ஆக்கிரமிப்புகளை அகற்றி ரோடுகளை விரிவாக்கம் செய்ய திட்டம் appeared first on Dinakaran.

Related Stories: