முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மகளிர் உரிமை மாநாடு: சோனியா, பிரியங்கா பங்கேற்பு; கனிமொழி எம்பி அறிவிப்பு

சென்னை: திமுக துணைப் பொதுச்செயலாளரும்-நாடாளுமன்ற குழுத் துணைத் தலைவருமான கனிமொழி எம்.பி. நேற்று வெளியிட்ட அறிக்கை: திமுக தலைவர், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக மகளிர் அணி சார்பில் வருகிற 14ம் தேதி (சனிக்கிழமை) சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் ‘மகளிர் உரிமை மாநாடு’ நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க திமுக தலைவர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி, தேசியவாத காங்கிரஸ் கட்சி செயல் தலைவர் சுப்ரியா சுலே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொலிட் பீரோ உறுப்பினர் சுபாஷினி அலி, இந்தியக் கம்யூனிஸ்ட் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினரும், இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் பொதுச் செயலாளருமான ஆனி ராஜா உள்ளிட்ட இந்தியா கூட்டணியின் பல்வேறு முக்கிய தலைவர்கள் சிறப்புரை ஆற்ற உள்ளார்கள். பெண்ணுரிமைப் போற்றும் இந்த மாநாட்டில் திமுக மகளிர் அணியைச் சார்ந்த அனைவரும்-தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மகளிர் சகோதரிகளும் கலந்துகொள்ள வேண்டும் என அன்புடன் அழைக்கிறேன்.

The post முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மகளிர் உரிமை மாநாடு: சோனியா, பிரியங்கா பங்கேற்பு; கனிமொழி எம்பி அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: