பாஜவுடன் கூட்டணி முறிவு; தூத்துக்குடியில் அதிமுகவினர் பரபரப்பு போஸ்டர்

தூத்துக்குடி: பா.ஜ. கூட்டணி முறிவு அறிவிப்பையொட்டி தூத்துக்குடியில் எடப்பாடி முடிவுக்கு ஆதரவு ெதரிவித்தும், சமூக வலைதளங்களில் பதிவு போட்டும் அதிமுக நிர்வாகிகள் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் பாஜ உடனான கூட்டணி முறிவு அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடியில் கடந்த வாரம், ‘‘கூட்டணியாவது, கூந்தலாவது, நன்றி மீண்டும் வராதீர்கள்’’ என்று அதிமுகவினர் போஸ்டர் ஒட்டினர்.

இந்நிலையில் நேற்று எடப்பாடி பழனிச்சாமியின் அதிகாரபூர்வ அறிவிப்பையடுத்து, ‘‘ நோட்டாவின் போட்டியாளர்களுக்கு டாட்டா காட்டிய எடப்பாடியாரை வாழ்த்தி வணங்குகிறேன்’’ என்று தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்பி சண்முகநாதன் பெயரில் சமூக வலைதளங்களில் போஸ்டர் பதிவு போடப்பட்டுள்ளது. பாஜவுடனான கூட்டணி முறிவை வரவேற்று, ‘‘கருவாடு மீன் ஆகாது, பிஜேபி தமிழகத்துக்கு ஆகாது’’ என்று தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக எம்ஜிஆர் இளைஞரணி நிர்வாகிகள் திருச்சிற்றம்பலம், டைகர்சிவா ஆகியோர் இன்று தூத்துக்குடியில் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.

The post பாஜவுடன் கூட்டணி முறிவு; தூத்துக்குடியில் அதிமுகவினர் பரபரப்பு போஸ்டர் appeared first on Dinakaran.

Related Stories: