66-வது காமன்வெல்த் பாராளுமன்ற மாநாட்டில் பங்கேற்க கானா புறப்பட்டார் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு!

சென்னை: சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு கானா நாட்டில் நடைபெறவுள்ள 66-வது காமன்வெல்த் பாராளுமன்ற மாநாட்டில் பங்கேற்பதற்க்காக சென்னை விமான நிலையத்தியிலிருந்து புறப்பட்டார். 2023 அக்டோபர் மாதம் 03 முதல் 05 வரை கானா நாட்டின் தலைநகர் அக்ராவில் நடைபெறவிருக்கும் 66 வது காமன்வெல்த் பாராளுமன்ற மாநாட்டில் தமிழக கிளையின் பிரதிநிதியாக பேரவைத் தலைவர் அப்பாவு கலந்து கொள்கிறார்.

முனைவர். கி.சீனிவாசன், சட்டமன்ற செயலாளர் இம்மாநாட்டில் இந்திய வட்டார பிரதிநிதிகளின் செயலாளராக கலந்து கொள்கிறார். மேலும் ப.பத்மகுமார் பேரவைத் தலைவரின் சிறப்பு தனிச் செயலாளர் அவர்களும் மேற்குறித்த மாநாட்டில் கலந்துகொள்கிறார்.

பேரவைத் தலைவர் செயலாளர் மற்றும் பேரவைத் தலைவரின் சிறப்பு தனிச் செயலாளர் ஆகியோர் மேற்குறிப்பிட்ட மாநாட்டில் கலந்து கொள்வதற்காக 26.09.2023 (செவ்வாய்க்கிழமை) இன்று காலை 9.50 மணிக்கு எமிரேட்ஸ் விமானம் (EK 545) மூலம் துபாய் சென்று அங்கிருந்து எகிப்து, மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் ஆய்வுப் பயணம் மேற்கொண்டு.

பின்பு அக்ரா நகருக்கு 03.10.2023 அன்று சென்றடையவுள்ளனர். பேரவைத் தலைவர் செயலாளர் மற்றும் பேரவைத் தலைவரின் சிறப்பு தனிச் செயலாளர் ஆகியோர் மேற்குறிப்பிட்ட மாநாட்டில் கலந்து கொண்டுவிட்டு 07.10.2023 (சனிக்கிழமை) காலை 08.25 மணியளவில் எமிரேட்ஸ் விமானம் (EK 544) மூலம் சென்னை வந்தடைகின்றனர்.

 

The post 66-வது காமன்வெல்த் பாராளுமன்ற மாநாட்டில் பங்கேற்க கானா புறப்பட்டார் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு! appeared first on Dinakaran.

Related Stories: