திமுக சார்பில் பூத் கமிட்டி செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம்

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் செங்காடு, மண்ணூர், வளர்புரம் ஊராட்சிகளில் பூத் கமிட்டி வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் அந்தந்த ஊராட்சிகளில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், தெற்கு ஒன்றிய செயலாளர் மேவளூர்குப்பம் கோபால் தலைமை வகித்தார். மாவட்ட துணை அமைப்பாளர் வளர்புரம் ஜார்ஜ், மாவட்ட பிரதிநிதி சர்தார்பாஷா, ஒன்றிய துணை அமைப்பாளர்கள் தண்டலம் மனோஜ், அருண்பாரத், செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் பெரும்புதூர் வடக்கு ஒன்றிய பொருளாளர் மணிவண்ணன் கலந்து கொண்டு பூத் கமிட்டி நிர்வாகிகள் மற்றும் செயல் வீரர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார். 100 வாக்காளர்களுக்கு ஒரு முகவர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள், வீடு வீடாக சென்று திமுகவின் சாதனைகளை விளக்கி, நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் அதிகப்படியான வாக்குகள் பெற்றுத் தர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. கிளாய் கிளை செயலாளர் மோகன், செங்காடு கிளை செயலாளர்கள் செந்தில், கோவிதராஜ், வார்டு உறுப்பினர் ரேகா செந்தில்குமார், மண்ணூர் கிளை செயலாளர் ராமமூர்த்தி, வளர்புரம் கிளை செயலாளர்கள் ரவிசந்திரன், முனுசாமி, ஜார்ஜ், வளர்புரம் ஊராட்சி துணை தலைவர் எபி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post திமுக சார்பில் பூத் கமிட்டி செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: