மக்களவையில் ஆபாச பேச்சு நட்டாவிடம் பாஜ எம்.பி விளக்கம்

புதுடெல்லி: மக்களவையில் நடந்த மகளிர் இடஒதுக்கீடு மசோதா மீதான விவாதத்தின் போது பேசிய பாஜ எம்பி. ரமேஷ் பிதுரி, பகுஜன் சமாஜ் எம்பி. டேனிஷ் அலி குறித்து ஆபாசமான மற்றும் தகாத வார்த்தைகளால் பேசினார். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த பெரும்பாலான எதிர்க்கட்சி எம்பி.க்கள் அவர் மீது நடவடிக்கை எடுக்க சபாநாயகரை வலியுறுத்தினர்.

அதே நேரம்,பாஜ எம்பி.க்களில் பலர், சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எழுதிய கடிதத்தில், பிதுரியை டேனிஷ் அலி ஆத்திரமூட்டியதால் தான் அவர் அவ்வாறு பேசியதாகவும் அது குறித்த விசாரணைக்கு உத்தரவிடும்படியும் கேட்டு கொண்டுள்ளனர். இதற்கிடையே, இது குறித்து கட்சி மேலிடம் நோட்டீஸ் அனுப்பியதைத் தொடர்ந்து, நேற்று அவர் பாஜ தலைவர் ஜே.பி. நட்டாவை கட்சி தலைமை அலுவலகத்தில் சந்தித்து விளக்கம் அளித்தார். இந்த கூட்டத்தில் என்ன நடந்தது என்பது குறித்து எந்த தகவலும் தெரிவிக்கப்பட்டவில்லை.

The post மக்களவையில் ஆபாச பேச்சு நட்டாவிடம் பாஜ எம்.பி விளக்கம் appeared first on Dinakaran.

Related Stories: