விசேஷ நாட்கள் இல்லாததால் கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்களின் விலை கடும் சரிவு

அண்ணாநகர்: சென்னையில் மழை மற்றும் புரட்டாசி மாதம் விசேஷ நாட்கள் இல்லாததால் கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று காலை அனைத்து பூக்களின் விலை கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. ஒரு கிலோ மல்லி, கனகாம்பரம் 400க்கும் ஐஸ் மல்லி 300க்கும் ஜாதிமல்லி, முல்லை 200க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சாமந்தி, பன்னீர் ரோஸ் 20க்கும் சம்பங்கி 40க்கும் சாக்லேட் ரோஸ் 30க்கும் அரளி பூ 50 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கோயம்பேடு பூ மார்க்கெட் நிர்வாக குழு தலைவர் முத்துராஜ் கூறியதாவது; தொடர்ந்து மழை பெய்துவருவதாலும் புரட்டாசி என்பதாலும் விசேஷ நாட்கள் இல்லாததால் அனைத்து பூக்களின் விலை குறைந்துள்ளது.

இதனால் இல்லதரசிகள் மகிழ்ச்சியுடன் வாங்கி செல்கின்றனர். அனைத்து பூக்களையும் குறைந்த விலையில் வியாபாரிகள் விற்பனை செய்து வந்தாலும் சென்னை மற்றும் புறநகர் சில்லறை வியாபாரிகள் பூக்களை வாங்க வராததால் அனைத்து பூக்களையும் குப்பையில் கொட்டும் நிலைமை ஏற்பட்டுள்ளது. விநாயகர் சிலைகளை தமிழகம் முழுவதும் கடலில் கரைத்தனர். கோயம்பேடு பூ மார்க்கெட்டில் இருந்து விநாயகர் சிலையை கடலில் கரைப்பதற்கு கொண்டு செல்வதற்கு முன்பு சுமார் 20 டன் சாமந்தி, சம்பங்கி, பன்னீர் ரோஸ், சாக்லேட் ரோஸ் பூக்களை விநாயகர் சிலைகள் முன் வாரி இறைத்தனர்.

The post விசேஷ நாட்கள் இல்லாததால் கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்களின் விலை கடும் சரிவு appeared first on Dinakaran.

Related Stories: