இவ்வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. கடந்த முறை விசாரணையின்போது அமைச்சர் பொன்முடியின் மகன் கவுதம சிகாமணி உள்ளிட்ட 3 பேர் ஆஜராகவில்லை. செம்மண் குவாரி வழக்கில் குற்றச்சாட்டப்பட்ட கோபிநாத், ஜெயசந்திரன் உள்ளிட்ட 4 பேர் ஆஜராகியிருந்தனர். இந்த வழக்கில் அரசுத் தரப்பு சாட்சிகளாக மொத்தம் 67 போ் சோ்க்கப்பட்டுள்ளனா்.
கடந்த 7-ஆம் தேதி வரை மொத்தம் 11 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதில், ஓய்வுபெற்ற வட்டாட்சியா், நில அளவைத் துறை முன்னாள் துணை ஆய்வாளா், கனிம வளத் துறை முன்னாள் துணை இயக்குநா் உள்பட 9 போ் அரசுத் தரப்புக்கு பாதகமாக பிறழ் சாட்சியமளித்ததாகவும், இருவா் மட்டுமே முறையான சாட்சியங்களைப் பதிவு செய்தனா் எனவும் கூறப்பட்டது.
அரசு தரப்பு சாட்சிகள் தொடா்ந்து பிறழ் சாட்சியமாக மாறி வருவதால், வழக்கு விசாரணைக்கு உதவும் வகையில், தன்னையும் இணைத்துக்கொள்ள கோரி, அதிமுக முன்னாள் அமைச்சா் ஜெயக்குமாா் சாா்பில், விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 8-ஆம் தேதி மனு தாக்கல் செய்யப்பட்டது. செம்மண் வழக்கில் புதிய மனுவால் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த மனு விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, முன்னாள் அமைச்சா் டி.ஜெயக்குமாா் இன்று ஆஜராக வேண்டும் என்று நீதிபதி ஆா்.பூா்ணிமா உத்தரவிட்டாா்.
இந்த நிலையில், அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நீதிமன்றத்தில் ஆஜரானார். அமைச்சர் பொன்முடி வழக்கில் சாட்சிகள் பிறழ்சாட்சியாக மாறுவதாக கூறி இவ்வழக்கில் தன்னையும் இணைத்துக்கொள்ள கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்த மனு ஏற்கப்பட்ட நிலையில், விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று ஆஜராகியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
The post அமைச்சர் பொன்முடி தொடர்பான வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர் appeared first on Dinakaran.