வேலைக்கான விண்ணப்பம் துவங்கி, ஒரு தொழில் துவங்குவதற்கான விண்ணப்பம், தொழில் திட்டங்கள், அலுவலக அட்டவணைகள், கிராப்கள் என அனைத்தும் இன்று வெறுமனே பேப்பர்களில் இல்லாமல் அல்லது சலிப்பூட்டும் வெள்ளைநிற வோர்ட் டாக்குமெண்டுகளாக இல்லாமல், வண்ணமயமான கிராபிக்ஸ்கள், அனிமேஷன்கள், டூடுல் கேரக்டர் என கலக்க வேண்டிய சூழல் உருவாகிவிட்டது. இதற்குத்தான் உதவுகிறது ‘பெனிம்-ஒயிட்போர்ட் வீடியோ மேக்கர்’ (Benime-Whiteboard Video Maker) செயலி . உங்களின் அலுவலக மீட்டிங் சார்ட்கள், கல்லூரி அசைன்மெண்ட்கள், வேலைக்கான விண்ணப்பங்கள், என அனைத்தும் உயிர்பெற்று அனிமேஷனில் கொடுத்தால் இன்னும் சிறப்பாக இருக்குமே. அதற்குதான் இந்த செயலியை பயன்படுத்தலாம். அனைவருமே பயன்படுத்தும் வண்ணம், மிக சுலபமாக இதன் வசதிகளும், கிராபிக் செயல் முறைகளும் இருப்பதால் யாரும் பயன்படுத்தலாம்.
The post பெனிம் – வீடியோ மேக்கர் appeared first on Dinakaran.