சேத்தியாத்தோப்பு பகுதியில் ஓடும் பஸ்சில் நகை திருடிய 2 பெண்கள் அதிரடி கைது

 

சேத்தியாத்தோப்பு, செப். 25: கடலூர் மாவட்டம் புவனகிரி பகுதியை சேர்ந்தவர் நவ்ஷாத்பேகம்(45). இவர் கடந்த மே மாதம் அரசு பேருந்தில் புவனகிரியில் இருந்து வடலூர் நோக்கி வந்துள்ளார். சேத்தியாத்தோப்பு குறுக்குரோடு பகுதியில் வந்தபோது அவரது பையில் வைத்திருந்த 7 பவுன் நகை மற்றும் பணம் காணாமல் போயிருந்தது. பேருந்தில் அவரது இருக்கையின் அருகே அமர்ந்து வந்த 2 பெண்கள் வழியிலேயே இறங்கிவிட்டதால் அந்த பெண்கள் மீது அவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இது குறித்து அவர் சேத்தியாத்தோப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் வளவனூர் போலீசாரால் திருட்டு வழக்கு ஒன்றில் சென்னை பொத்தேரியை சேர்ந்த சக்திவேல் மனைவி வேளாங்கண்ணி(26) மற்றும் மணிகண்டன் மனைவி நதியா(24) ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், சேத்தியாத்தோப்பு குறுக்கு ரோடு பகுதியில் சென்ற பேருந்தில், பெண்ணிடம் 7 சவரன் நகைகள், பணம் திருடியதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து 2 பெண்களையும் சேத்தியாத்தோப்பு போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர். அதில், திருடிய நகைகளை வடலூரில் ஒரு நபரிடம் கொடுத்ததாக தெரிவித்தனர். இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர்கள் சந்திரா, ராஜா, ஏட்டுக்கள் விஜயகுமார், ரஜினி. சங்கர், புகழேந்தி ஆகியோர் வடலூர் சென்று 7 பவுன் நகைகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சேத்தியாத்தோப்பு பகுதியில் ஓடும் பஸ்சில் நகை திருடிய 2 பெண்கள் அதிரடி கைது appeared first on Dinakaran.

Related Stories: