கோவையில் மீலாடி நபி, காந்தி ஜெயந்தி நாளில் டாஸ்மாக் கடைக்கு விடுமுறை அறிவிப்பு

 

கோவை, செப். 25: கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து தமிழ்நாடு மாநில வாணிப கழகம் மதுபான கடைகள், அதனுடன் இணைக்கப்பட்ட மதுக்கூடங்கள், அனைத்து பொழுதுபோக்கு மன மகிழ்மன்றங்களில் செயல்படும் மதுக்கூடங்கள், நட்சத்திர ஓட்டலில் செயல்படும் மதுக்கூடம் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட அயல்நாட்டு மதுபான வகைகள் விற்பனை செய்யும் கடைகள் அனைத்தும் வரும் 28ம் தேதி மீலாடி நபி அன்றும், வரும் அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி ஆகிய 2 நாட்கள் டிரை டே நாளாக கடைப்பிடிப்பதால், கடைகள் மூட மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி உத்தரவிட்டுள்ளார். மேலும், விதிமுறைகளுக்கு முரணாக விடுமுறை அளிக்கப்பட்ட தேதியில் மதுபானங்கள் விற்பனை செய்பவர்கள் மீது சட்ட விதிகளின்படி, நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

The post கோவையில் மீலாடி நபி, காந்தி ஜெயந்தி நாளில் டாஸ்மாக் கடைக்கு விடுமுறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: