குறு, சிறு தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டணத்தை குறைக்க வேண்டும்: அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கை: வேலைவாய்ப்பு மற்றும் உற்பத்தியைப் பெருக்குவதுடன், நமது நாட்டின் பொருளாதார அமைப்பின் துடிப்பான அங்கமாக, உயிர்நாடியாக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் விளங்குகின்றன. அந்தவகையில், பொருளாதாரத்தின் ஆணிவேராக விளங்கும் இதுபோன்ற நிறுவனங்கள் செயலிழந்து போகும் நிலை ஏற்பட்டுள்ளது. தங்கள் கோரிக்கையை ஏற்காத மின்வாரியத்தை கண்டித்து, தொழில் துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு கதவடைப்பு போராட்டத்தினையும், மதுரையில் உண்ணாவிரதப் போராட்டத்தினையும் அறிவித்திருந்தது.

இந்த நிலையில், 12 கிலோ வாட்டுக்கு குறைவாக உள்ள தொழில் நிறுவனங்களை 3A1 கட்டண விகிதத்திற்கு மாற்ற தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திற்கு பரிந்துரை செய்வது உள்ளிட்ட ஒரு சில சலுகைகளை மட்டும் முதல்வர் அறிவித்திருப்பது குறு, சிறு மற்றம் நடுத்தரத் தொழில் துறையினரை மிகுந்த அதிருப்திக்கு ஆளாக்கியுள்ளது. எனவே, பொருளாதாரத்தையும், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் தற்போதைய சூழ்நிலையையும் கருத்தில் கொண்டு, வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அமைப்புகளை அழைத்துப் பேசி, அவர்களுடைய நியாயமான கோரிக்கைகளுக்கு தீர்வு காண வேண்டுமென்று அரசை வலியுறுத்தி கேட்டு கொள்கிறேன்.

The post குறு, சிறு தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டணத்தை குறைக்க வேண்டும்: அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: