ம.பி பாஜக வேட்பாளர் தேர்வில் பெண்களுக்கு 50% ஒதுக்கீடு வேணும்: மாஜி முதல்வர் கோரிக்கை

போபால்: மத்திய பிரதேச பாஜக வேட்பாளர் தேர்வில் பெண்களுக்கு 50 சதவீத ஒதுக்கீடு வேண்டும் என்று முன்னாள் முதல்வர் உமாபாரதி கோரிக்கை விடுத்துள்ளார். பாஜகவின் மூத்த தலைவரும், மத்தியப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வருமான உமாபாரதி அளித்த பேட்டியில், ‘மத்திய பிரதேச சட்டப் பேரவை தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் பெண் வேட்பாளர்களை தேர்வு செய்யும் போது, 50 சதவீதம் ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஓபிசி பிரிவினருக்கு 27 சதவீதமும், எஸ்டி-எஸ்சி பிரிவினருக்கு 22 சதவீதமும் இடஒதுக்கீடு அளிக்க வேண்டும்.

முதல்வர் சிவராஜ் சிங்குடன் இணைந்து பணியாற்றவோ, கட்சியை பலவீனப்படுத்தவோ விரும்பவில்லை. பிரதமர் மோடி நாளை (25ம் தேதி) போபால் வருகிறார். அப்போது நான் இங்கு இருக்க மாட்டேன். கட்சியில் சீட் ஒதுக்கீடு குறித்தும் பிரதமரிடம் பேச மாட்டேன். ஓபிசி பெண்கள் இடஒதுக்கீட்டை பிரதமர் பரிசீலிக்க வேண்டும்’ என்றார். ஏற்கனவே கட்சிப் பணியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட உமா பாரதி, அவ்வப்போது மத்திய பிரதேச பாஜக அரசு குறித்தும், தேசிய தலைமை குறித்தும் கருத்துகளை கூறி வருவது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

The post ம.பி பாஜக வேட்பாளர் தேர்வில் பெண்களுக்கு 50% ஒதுக்கீடு வேணும்: மாஜி முதல்வர் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: