வாலிபரை தாக்கிய 5 பேர் மீது வழக்கு

 

விருத்தாசலம், செப். 24: விருத்தாசலம் காந்தி நகரை சேர்ந்தவர் பாவாடைராயன்(42). இவருக்கும், அண்ணா நகரை சேர்ந்த சக்திவேல் என்பவருக்கும் நகை கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில், சம்பவத்தன்று இவர்களுக்குள் மீண்டும் தகறாறு ஏற்பட்டுள்ளது. அப்போது சக்திவேல் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 4 பேர் சேர்ந்து, பாவாடைராயனை அசிங்கமாக திட்டி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து பாவாடைராயன் கொடுத்த புகாரின் பேரில், சக்திவேல் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 4 பேர் மீது விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வாலிபரை தாக்கிய 5 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Related Stories: