கஞ்சா கடத்தியவர் கைது

 

அன்னூர், செப்.24: கோவை மாவட்டம், கோவில்பாளையத்தை அடுத்துள்ள கோட்டைப்பாளையம் பகுதியில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக காவல் ஆய்வாளர் ஞானசேகரனுக்கு தகவல் வந்துள்ளது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற எஸ்.ஐ. கவியரசு தலைமையிலான போலீசார் கோட்டைப்பாளையம் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில், அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார்.

இதனையடுத்து அந்த நபரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் விசாரணையில் அவர் கோவை கணபதி பகுதியை சேர்ந்த ராஜகோபால் என்பவரது மகன் சோமசுந்தரம் (44) என்பதும் கஞ்சா கடத்தி வந்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து, கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து ஒன்றரை கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

The post கஞ்சா கடத்தியவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: