விடுதலை சிறுத்தைகள் கண்டன ஆர்ப்பாட்டம்

 

கோவை, செப். 24: கோவை மாநகர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், கிணத்துக்கடவு வடசித்தூர் கிராமம் சமத்துவபுரம் பகுதியில் அமைந்துள்ள, தந்தை பெரியார் சிலையை அவமதித்த சமூக விரோதிகளை உடனடியாக கைது செய்து, குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறைப்படுத்தக்கோரி, கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநகர் மாவட்ட செயலாளர் கோவை குமணன் தலைமை தாங்கினார். இதில், பங்கேற்றவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட துணை செயலாளர் கோட்டை சேது, கோவை தெற்கு தொகுதி செயலாளர் பாலசிங்கம், நிர்வாகிகள் சிங்கை கண்ணன், தளபதி சபிக், கோவை தமிழன், சிறுத்தை ஹக்கிம், வை.குடியரசு, துரை.இளங்கோவன், கண்ணகி, கரிகாலன், மருத்துவர் மாணிக்கம், தொல்குடி மைந்தன், கோவை குரு, ஸ்டீபன் சுந்தர், கோவை ராசா, விடுதலை அன்பன், பொன்.வெங்கடேசன், பாலகிருஷ்ணன், கோவை சம்பத், சத்யா, சந்தோஷ், மருது, சாலமன், இருகூர் சித்ரா, தென்றல் கார்த்திக், ஆத்துப்பாலம் அந்தோணி, வழ.நீலமேகம், கோவை கலை, சிறுத்தை சிவா, சிங்கை நாகராஜ், சிங்கை பிரகாஷ், வினோத், ஆட்டோ ஜமால், ஆட்டோ கணேஷ், குறிச்சி அருண், விஜயகுமார், ஜேசுகான்ஸ், காந்தி மனோகர், பாவரசு, நித்ய பிரகாஷ், கோகுல், சிங்கை உதயா உள்பட பலர் பங்கேற்றனர்.

The post விடுதலை சிறுத்தைகள் கண்டன ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: