தொலைபேசி எண்ணின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்ததில் அது திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கு சொந்தமானது என கண்டறியப்பட்டது. அவர் கடலூரில் இருப்பதும் தெரியவந்தது. அதன்பேரில் தனிப்படை ஒன்று அமைத்து புலன் விசாரணையை போலீசார் மேற்கொண்டனர். நேற்றுமுன்தினம் சுதாகரன் (26) மற்றும் புகழேந்தி (20) ஆகியோர் கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் கைது செய்யப்பட்டனர். இவர்கள் பயன்படுத்திய 3 செல்போன்கள் மற்றும் 1 லேப்டாப் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட இருவரிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இவர்களுக்கு திருப்பூர், அடையாறு மற்றும் செங்கல்பட்டு ஆகிய இடங்களில் மேலும் மூன்று வழக்குகளில் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டது. இவர்கள் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி 40க்கும் மேற்பட்டவர்களை ஏமாற்றியுள்ளதும் தெரிந்தது. சுதாகர் பிளஸ் 2 படித்து விட்டு ஆன்லைன் டிரேடிங்கில் பணியாற்றி வந்தது தெரிய வந்தது. பின்னர் சொந்தமாக விருத்தாசலத்தில் அலுவலகம் தொடங்கி பல வாட்ஸ் அப் குழுக்களை உருவாக்கி ஆன்லைன் டிரேடிங் மார்க்கெட்டிங் வகுப்புகளை எடுத்து வந்ததும் தெரியவந்தது. இவரது ஆலோசனையின் பேரில் ஒரு சில முதலீட்டாளர்கள் அதிக லாபம் அடைந்துள்ளனர்.
குறிப்பாக சுதாகர் மார்க்கெட்டிங் ஆலோசகராக இருந்த போது ஒரு முதலீட்டாளர் பணத்தை இழந்ததால் அவருக்கு பணத்தை கொடுக்க வாட்ஸ் அப்பில் குழுவில் சினிமாவில் நடிக்க ஆட்கள் தேவை என்று வரும் விளம்பரங்களைச் செய்து அதை வாட்ஸ் அப் குழு மற்றும் இன்ஸ்டாகிராமில் விளம்பரம் செய்து சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடும் நபர்களை குறிவைத்து பணம் பறித்து மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. லைகா, ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனங்களின் பெயரில் இருவரும் இணைந்து மோசடியில் ஈடுப்பட்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. சுதாகர் சுமார் 3000 பேரிடம் ரூ.10 லட்சத்திற்கும் மேல் மோசடி செய்துள்ளதும் இவருக்கு உதவியாளராக புகழேந்தி செயல்பட்டதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து முக்கிய ஆவணங்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
The post நடிகர் கமலின் ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனம் பெயரில் போலி விளம்பரம் செய்து ரூ.10 லட்சம் ஏமாற்றிய இருவர் கைது: சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை appeared first on Dinakaran.