வேளாண் பல்கலை டிப்ளமோ படிப்புகளுக்கான ஆன்லைன் கலந்தாய்வு

 

கோவை, செப். 23: தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் வேளாண்மை தோட்டக்கலை மற்றும் வேளாண்மை பொறியியல் டிப்ளமோ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியில் பல்கலையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த கலந்தாய்வு கடந்த 20ம் தேதி துவங்கியது. இன்று (23ம் தேதி) மாலை 5 மணி வரை நடக்கிறது. கலந்தாய்வு தொடர்பான தகவல்கள் விண்ணப்பதாரர்களின் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் மற்றும் மொபைல் எண்ணிற்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்பட்டுள்ளது.

ஆன்லைன் கலந்தாய்வுக்கு எவ்வித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. சான்றிதழ் சரிபார்ப்பின் போது கட்டணம் பெற்றுக்கொள்ளப்படும். மேலும், விண்ணப்பதாரர்கள் tnagfi.ucanapply.com என்ற இணையதளத்தில் தங்களின் தரவுகளை வைத்து உள்நுழைந்து இன்று மாலை வரை கல்லூரி மற்றும் பாட விருப்பங்களை மாற்றிக்கொள்ளலாம் என பல்கலைக்கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post வேளாண் பல்கலை டிப்ளமோ படிப்புகளுக்கான ஆன்லைன் கலந்தாய்வு appeared first on Dinakaran.

Related Stories: