மேட்டுப்பாளையம் – கோத்தகிரி சாலையில் இரு லாரிகள் நேருக்கு நேர் மோதி இருவர் காயம்

 

மேட்டுப்பாளையம், செப்.22: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி டி.மணியம்பட்டி பகுதியை சேர்ந்த நாகராஜ் என்பவரது மகன் கஜேந்திரன் (31). இவர், டாட்டா பென்ஸ் லாரியின் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் கஜேந்திரன் கோத்தகிரியில் இருந்து உருளைக்கிழங்கு லோடு எடுத்துக்கொண்டு மேட்டுப்பாளையம் நோக்கி வந்து கொண்டிருந்தார். அதேபோல், மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரி நோக்கி டிப்பர் லாரி ஒன்றும் சென்று கொண்டு இருந்துள்ளது. அப்போது,கோத்தகிரி சாலையில் காட்டு காளியம்மன் கோவில் அருகே சென்ற போது கண்ணிமைக்கும் நேரத்தில் இரு லாரிகளும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.

இதில், கோத்தகிரியை சேர்ந்த டிரைவர் கஜேந்திரன் மற்றும் கிளீனர் ஜீவா(எ) திவாகரன் (22) உள்ளிட்ட இருவரும் படுகாயமடைந்துள்ளனர். அக்கம், பக்கத்தினர் அவர்களை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்த சம்பவம் குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தினை ஏற்படுத்திய டிப்பர் லாரியின் டிரைவர் நேரு (40) என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post மேட்டுப்பாளையம் – கோத்தகிரி சாலையில் இரு லாரிகள் நேருக்கு நேர் மோதி இருவர் காயம் appeared first on Dinakaran.

Related Stories: