கோவை மாநகரில் 271 விநாயகர் சிலைகள் கரைப்பு

 

கோவை, செப்.22: கோவை நகரில் பல்வேறு பகுதியில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இதில் 384 விநாயகர் சிலைகள் குறிச்சி குளம், குனியமுத்தூர் குளம், சிங்காநல்லூர் மற்றும் வெள்ளக்கிணறு குளங்களில் கடந்த 20ம் தேதி விசர்ஜன ஊர்வலம் நடத்தி கரைக்கப்பட்டது. சிலை கரைப்பு ஊர்வலத்தையொட்டி நகரில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. விநாயகர் பாடலுடன் வாகனங்களில் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் ஊர்வலத்தில் அதிகளவு கலந்து கொண்டனர். பல்வேறு வடிவங்களில் அமைக்கப்பட்ட சிலைகள் குளங்களில் விசர்ஜனம் செய்யப்பட்டது.

சிலை கரைப்பு பணிகள் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டிருந்தனர். சிலைகள் வாகனங்களில் இருந்து இறக்கி, குளத்தின் ஒரு பகுதியில் கரைப்பு பணிக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் ஒப்படைக்கப்பட்டது. அங்கே தீயணைப்பு துறையினரை சிலைகளை நீரில் வைத்து கரைத்தனர். நீச்சல் தெரியாத நபர்கள் நீரில் இறங்க அனுமதிக்கப்படவில்லை. இன்று நகரில் பல்வேறு இடங்களில் பல்வேறு அமைப்புகள் சார்பில் வைக்கப்பட்ட 271 சிலைகள் முத்தண்ண குளம், வெள்ளலூர் குளத்தில் கரைக்கப்படும். பொதுமக்கள் சார்பில் வைக்கப்பட்ட 27 சிலைகளும் கரைக்கப்படுகிறது. முத்தண்ணகுளம், வெள்ளலூர் குளங்களில் இந்த சிலைகளை கரைக்கப்படவுள்ளது. சிலை கரைப்பு பணிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் செய்து வருகின்றனர்.

The post கோவை மாநகரில் 271 விநாயகர் சிலைகள் கரைப்பு appeared first on Dinakaran.

Related Stories: