திமுக மகளிர் அணி சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா மாநாடு, கருத்தரங்கம்: சோனியா, மம்தா பங்கேற்க அழைப்பு

சென்னை: திமுக மகளிர் அணி சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா மாநாடு, கருத்தரங்கத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கலைஞரின் நூற்றாண்டு விழா தமிழக அரசு சார்பிலும், திமுக சார்பிலும் ஆண்டு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி திமுக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., திமுக மகளிர் அணி சார்பில் மாதம் 14ம் தேதி பிரமாண்டமான மகளிர் மாநாடு மற்றும் கருத்தரங்கத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மாநாடு சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் 14ம் தேதி மாலை நடக்கிறது.

இதில் பெண்கள் முன்னேற்றத்துக்காக கலைஞர் செய்த சாதனைகள்-திட்டங்களை பற்றி எடுத்துரைத்து, கலைஞருக்கு பெருமை சேர்த்திடும் வகையில் மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்த மாநாட்டில் பெண்களுக்காக பாடுபட்ட அகில இந்திய அளவில் பெண் தலைவர்களையும் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியை, கனிமொழி எம்.பி. நேரில் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளார். மேலும் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் 2 பேரும் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. யார், யார் பங்கேற்கிறார்கள் என்ற முழு விவரம் திமுக மகளிர் அணி சார்பில் விரைவில் வெளியிடப்படும்.

The post திமுக மகளிர் அணி சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா மாநாடு, கருத்தரங்கம்: சோனியா, மம்தா பங்கேற்க அழைப்பு appeared first on Dinakaran.

Related Stories: